வறுமை, வறுமை, வறுமை நிழலாகத் தாண்டவமாடியது முத்துப்பாண்டியின் வீட்டில்,
‘‘அம்மா இன்டர்வியூவுக்கு செல்ல வேண்டும்’’ என்றான் மகன் ,
அடுப்பறையில் இருக்கும் நீர் மோரை சாப்பிட்டு போடா. ‘என்ன’ இன்டர்வியூக்கா பதிலை தயார் செய்து விட்டாயா’ இது நீ போகிற 10வது இன்டர்வியூ. கடவுள் ஏன் தான் இப்படி நல்லவர்களை சோதிக்கிறாரோ? நல்லவர்களிடத்தில் விளையாடுவது அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சிபோல. வியர்வை சிந்த உழைத்து என்னப் பயன்? பையனை கரை சேர்க்க முடியவில்லையே, ‘நான் கண் மூடி விட்டால் யாரைப் போய் பார்ப்பான்? எப்படி காசை சம்பாதிப்பான்? எப்படி காசை புரட்டுவான்? அக்கம்பக்கம் கூட போய் கேட்க மாட்டானே. கூச்சப்படுவானே, என் குழந்தை எப்படி பிழைக்கும்? போடா போய் இன்டர்வியூ முடி; ஒரு வேலையை வாங்கு என்றாள் அம்மா.
‘அம்மா, என்னப்பா இன்டர்வியூ பெருங்குடியில் ‘எல்காட்’ கம்பெனி. போக வேண்டியதானே அம்மா காசு 100 ரூபாதான் உள்ளது. காலையில் பசியெடுக்கும்.
நீர் மோர் சாப்பிட்டு விட்டேன். மாலையில் சாப்பாடு முடிக்கவேண்டும். நிறைய பேர் வந்திருப்பார்கள். பஸ் செலவு வேறு. போக வர பஸ் டிக்கட்டுக்கு காசு வேண்டும்; பேனாவும் வாங்க வேண்டும். 2 ஜெராக்ஸ் சர்டிபிகேட் எடுத்தாக வேண்டும் அம்மா.
அம்மா, அடக் கடவுளே, என்ன சோதனை, அக்கம் பக்கம் எல்லாம் குடும்ப தேவைக்கு பணம் வாங்கி விட்டேன். பணி புரியும் இடங்களில் பணம் அட்வான்ஸ் வாங்கி விட்டேன். இருடா பக்கம் இருக்கும் பங்கஜம், ராமு, சேது, பார்வதி, சிவசங்கரிட்டே கடனா கேட்டுப் பார்க்கிறேன்.
அம்மா பையன் இன்டர்வியூ செல்ல வேண்டும். இப்போதே காசு வேண்டும் என்றாள் குப்பு.
இல்ல குப்பு என ராமு சொன்னான்.
அம்மா, இப்பத்தான் என் பையனுக்கு பள்ளியில் சேர்க்க 1000 ரூபா எடுத்துக் கொண்டு போறேன். நேற்றே கேட்டிருந்தா பேங்குல பணம் எடுத்து தந்திருப்பேன். இப்ப உடனடியா எப்படி?
அம்மா அழுதாள், அழுதாள், அழுதாள். பையன் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே. பூசை ரூமில் கடவுளை கும்பிட்டாள். மீண்டும் அழுதாள். வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
அப்போது ஒரு உருவம் நிழலாடியது. உடனே, பார்க்க…. கடவுள் படம் தெரிந்தது. அங்கே உண்டியல். திருப்பதி உண்டியல். உடைத்தாள் அப்பா… இந்தா பணம் .இன்டர்வியூ போய் வர பணம் கிடைத்தது. போனான் ; வேலை கிடைத்தது.
அம்மா குப்பு மகன் முத்துப்பாண்டி வாழ்க்கை சிறந்தது. அம்மா அம்மா தான்.
![]()





