ஆவடி, நவ. 10–
அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் இருந்த போது அங்கு சுற்றி திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்களை சோதனை செய்தபோது இரண்டு நபர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் 14 கிலோ கஞ்சா என மொத்தம் 34 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விக்னேஷ் (எ) விக்கி (எ) சேட்டா (22), தயாளன் (19) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் அனாகப்பள்ளி இரயில் நிலையம் அருகில் பெயர் விலாசம் தெரியாத நபரிடமிருந்து 34 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
![]()





