ஆவடி, ஜூலை 4–
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் இல்லா தமிழகம் என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவுபடியும், காவல் கூடுதல் ஆணையாளர் பவானீஸ்வரி உத்தரவுபடியும், அம்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவி உதவி ஆணையாளர் வழிகாட்டுதலின் படியும் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா என்னும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிர சோதனை நடைபெற்றது.
செங்குன்றம் மொண்டியம்மன் நகர் வாகண சோதனை சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் (30), விக்னேஷ்வரன் (28) ஆகியோரின் வைத்திருந்த பேக்கை சோதனை செய்த போது அவர்களிடம் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு பொன்னேரி குற்றவியல் நடுவர்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
![]()





