சென்னை, டிச. 16:
அம்பத்தூரில் கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் உதவி ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட், கருக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ராம்கி என்கிற ராமச்சந்திரன், மற்றும் சிவகாமி ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அவர்களிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தர்.
அவர்களிடம் நடத்தி ய விசாரணையில் இருவரும் கூட்டாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ய எடுத்து வந்தது தெரிய வந்தது. மேலும் ராம்கி என்கிற ராமச்சந்திரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவரை கைது செய்த அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை ஆவடி கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.
இதே போல் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பட்டரவாக்கம், ஞானமூர்த்தி நகர், மூர்த்தி தெருவிலுள்ள ரபி ஸ்டோர் என்ற கடையை நடத்தி வருபவரை சோதனை செய்தபோது அந்த கடையில் 10 கிலோ கஞ்சா மற்றும் 15 கிலோ கஞ்சா சக்லேட்டுகளை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.
கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து எதிரியை கைது செய்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை ஆவடி கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.
![]()





