செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Makkal Kural Official

மும்பை, டிச. 4:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 90.15 வரை சரிந்தது.

இந்நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு 90.43 வரை சரிந்தது.

ஓராண்டுக்குள் ரூபாயின் மதிப்பு ரூ. 5 சரிந்துள்ளது. (ரூ. 85 லிருந்து ரூ. 90 ஆக சரிவு).

இறக்குமதி தொடர்பான வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்படுதல், டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்டவை ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இந்தியா–அமெரிக்கா இடையே வரி விவகாரத்தில் இன்னும் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறிநிலை நீடித்து வருகிறது. அதன் தாக்கமும் அந்நியச் செலாவணி சந்தையில் ரூபாய் மதிப்பில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *