செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

Makkal Kural Official

வாஷிங்​டன்அ டிச. 11:

‘‘ஆப்​பிரிக்​கர்​கள் அரு​வருப்​பானவர்​கள்’’ என்று அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் பேசி​யுள்​ளது சர்ச்​சையை ஏற்படுத்தியுள்ளது.

பென்​சில்​வேனி​யா​வில் நடை​பெற்ற பேரணி​யில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், ”சோமாலியாவைச் சேர்ந்​தவர்​கள் அரு​வருப்​பானவர்​கள். பொது​வாக ஆப்​பிரிக்க நாடு​களில் இருந்து இங்கு குடிபெயர்ந்தவர்​கள் அனை​வருமே குப்​பைகள்​ தான். அவர்​கள் அமெரிக்கா​வுக்கு தேவையில்​லை. அதற்குப் பதிலாக நார்​வே, ஸ்வீடனிலிருந்து வருபவர்​களை நாம் ஏன் ஏற்க கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்​றால் டென்​மார்க்​கி​லிருந்து சில நல்​ல​வர்​களை எங்களுக்கு அனுப்புங்கள்’’ என்றார்.

சோ​மாலியா பேரழிவை ஏற்​படுத்​தும் இடம். சோ​மாலியர்​கள் குற்றச்​செயல்​களில் ஈடுபடுபவர்கள். அவர்​கள் கப்​பலை பின்​தொடர்வதில் மட்​டுமே சிறந்​தவர்​கள் என்றும் அவர் கூறி​னார்.

அமெரிக்க அதிப​ராக டிரம்ப் பொறுப்​பேற்​ற பிறகு சட்ட விரோதமாக குடியேறிவர்​கள் நாடு கடத்​தப்​பட்​டுள்ளனர். குடியேற்ற எதிர்ப்பு கொள்​கைக்கு அமெரிக்​கர்​களிடம் ஆதரவு திரட்​டும் வித​மாக அவ்​வப்​போது டிரம்ப் இது​போன்ற சர்ச்​சை​யான கருத்​துகளை தெரிவித்து வரு​கிறார்.

அதன் ஒரு பகு​தி​யாக தற்போது ஜனநாயக கட்​சி​யைச் சேர்ந்த இல்​ஹான் ஒமர் மீது இன ரீதியாக ட்ரம்ப் கடுமை​யான விமர்சனத்தை முன்​வைத்​தார். இல்​ஹான் ஒமர் சோமாலியாவைச் சேர்ந்த முஸ்​லிம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *