செய்திகள்

அமெரிக்காவுக்குள் 7 நாடுகள் நுழையத் தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு

Makkal Kural Official

வாஷிங்டன், டிச. 17–

சிரியா, மாலி உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் வர தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அமெரிக்கா அதிபர் குற்றம் சாட்டி வருகிறார்.

இதனால் பல்வேறு நாடுகளுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.

தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: சிரியா, புர்கினா பாசோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், லாவோஸ், சியராலியோன்

இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்காவுக்குள் நுழைய ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, ஈக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா நாடுகளை சேர்ந்தவர்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *