செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்

Makkal Kural Official

வாஷிங்டன், செப். 22–

அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்த ஷாப்பில் மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய மர்ம நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *