செய்திகள்

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை

Makkal Kural Official

வாஷிங்டன், செப். 18–

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் யார்க் கவுண்டியில் உள்ள நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஹார் சாலையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவாகி விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்கில் அவரை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் சென்றபோது, போலீசாரை நோக்கி துப்பாக்கிசூடு நடந்துள்ளது.

மாநில கவர்னர் ஜோஷ் ஷாபிரோ மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்தார். இது யார்க் கவுண்டிக்கும், முழு பென்சில்வேனியா மாநிலத்திற்கும் மிகுந்த வேதனையளிக்கும் ஒரு நாள் என்று அவர் குறிப்பிட்டார்.

நாம் அனைவரும் இப்போது இறந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்க வேண்டும். அவர்கள் நம்மை பாதுகாக்க தினமும் ஆபத்துக்குள் செல்லும் வீரர்கள் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *