சென்னை, நவ 17
சுசிரா டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு இயல் – இசை – நாடக மன்றம் இணைந்து நடத்தும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டம் சார்பில் இசை விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
தலைமை விருந்தினர்களாக சங்கீத வித்வான் கலைமாமணி ஆண்டான் கோவில் டாக்டர் ஏபிஎஸ் சிவகுமார், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் ஹேமநாதன் பங்கேற்றார்கள்.
இசை விழா, தமிழின் பண்பாட்டு மரபைக் கொண்டாடும் ஒரு மேடையாகவும், இளம் மற்றும் மூத்த கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு அருமையான வாய்ப்பாகவும் அமைகிறது. இசையின் ஒலி ஒற்றுமையின் மொழி. அந்த ஒற்றுமையை இன்று நாம் அனைவரும் சேர்ந்து அனுபவிக்கப் போகிறோம்’’ என்று வரவேற்புரையில் அதன் நிர்வாகி பிஎன் முரளிதரன் கூறினார்.
இசை விழா நடத்த அனுமதி வழங்கிய முதல்வர், இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், உறுப்பினர்- செயலாளர் விஜயா தாயன்பன், மன்ற உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
10-வது வயதில் மனுநீதிச் சோழன் இசை நாடகத்தில் முதல் மேடை அனுபவத்தை பெற்றவர், 8-வது வயதில் வலங்கைமான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் குரலிசை அரங்கேற்றம் செய்தவர் டாக்டர் ஏ பி எஸ் சிவக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை- – நாட்டிய கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர் ஹேமநாதன். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் குரல் இசை பிரிவில் பயின்று இசைக்கலை மணி பட்டயம் பெற்றுள்ளார்.
இப்போது உள்ள மிகச் சிறந்த வித்வான்கள் எல்லோருமே ஒரு காலத்தில் நாலு சபா கச்சேரிகள் பாடியவர்களாகவோ, வாசித்தவர்களாகவோத்தான் இருப்பார்கள். நீண்ட காலமாகவே இதை நாலு சபா கச்சேரி என்று அப்போதே சொல்வார்கள்’’ என்று ஏவிஎஸ் சிவகுமார் குறிப்பிட்டார்.
38 ஆண்டுகளுக்கு முன் லோகநாத சர்மாவால் தொடங்கப்பட்டது சுசிரா டிரஸ்ட். மயிலாப்பூரில் ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் பழம் பெரும் இசைக் கருவிகள் வைப்பகத்தை துவக்கி பாதுகாத்தது லோகநாதன் சர்மாவின் அளப்பரிய பணி என்று பாராட்டினார்
இந்த வருடம் தமிழ்நாட்டில் அத்தனை மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்துவதற்கு முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார் என்ற தகவலை அவர் வெளியிட்டார். அரசு இசைக் கல்லூரி மிருதங்க விரிவுரையாளர் கும்பகோணம் சரவணனை வரவேற்றதுடன், சிறப்பாக நடத்திய முகுந்த சாய், கிருஷ்ண சாய், சாய் கிருஷ்ணன், ஆனந்த மகாராஜ் (வயலின், மிருதங்கம், கடம் கலைஞர்கள் ஆகியோரை மனம் திறந்து பாராட்டினார்.
![]()





