செய்திகள்

அதிபர் மதுரோவை விடுதலை செய்யுங்கள்: வெனிசுலாவில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

கராகஸ், ஜன. 5:

அதிபர் மதுரோவை உடனடியாக விடுதலை செய்யுமாறு, வெனிசுலா தலைநகர் கராகஸில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் சாலைகளில் போராட்டம் நடத்தினர்.

போதைப்பொருள் கடத்தல், போதை பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவருடைய மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளத்திற்காக என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, அவரது மகன் மதுரோ குரேரா போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்த சூழலில், வெனிசுலா தலைநகர் கராகசில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுரோவின் ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மதுரோவையும், அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைதளத்தில் அதிபர் மதுரோவின் மகன் மதுரோ குரேரா வெளியிட்டுள்ள ஆடியோவில் கூறியதாவது:– ஆளும் இயக்கத்திற்குள் துரோகம் ஏற்பட வாய்ப்புள்ளது. வரலாறு பொறுப்பானவர்களை அம்பலப்படுத்தும். துரோகிகள் யார் என்பதை வரலாறு சொல்லும். நாம் அதை பார்ப்போம், என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *