சென்னை, ஜன. 3–
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று அண்ணா தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெறத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் அண்ணா தி.மு.க. தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால், கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்களான.
கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன், கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செ. செம்மலை, கழக மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன், கழக ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், கழக இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். வைகைச்செல்வன் ஆகியோர், கழக தேர்தல் அறிக்கையை தயார் செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்கள்.
தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மாணவர்களிடையே கருத்து கேட்க குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()





