செய்திகள்

அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Makkal Kural Official

சென்னை, செப். 24–

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெரும்பாலும் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.சென்னை ஐகோர்ட், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து நேற்று தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சோதனையில் அது புரளி எனத் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் அது புரளிதான் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *