செய்திகள்

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

Makkal Kural Official

சென்னை வானகரத்தில் நாளை

சென்னை, டிச. 9–

அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்து வருகிறார்.

வானகரம் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (10ந் தேதி) புதன்கிழமை காலை 10 மணிக்கு அண்ணா தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இன்னும் 4 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பொதுக்குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இக்கூட்டத்தில் வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்புக்கு முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 145வது வார்டு நெற்குன்றம் முதல் ஸ்ரீவாரு திருமண மண்டபம் வரை பூந்தமல்லி நெடுஞ்சாலை முழுவதும் அண்ணா தி.மு.க. கொடிகள், பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

நெற்குன்றம், மதுரவாயல் ஏரிக்கரை, வானகரம் உள்ளிட்ட இடங்களில் சிறிய மேடைகள் அமைக்கப்பட்டு நடனம், பேண்டு இசையுடன் கலைநிகழ்ச்சியுடன் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணமண்டபம் நுழைவு வாயில், மண்டபம் உள்பகுதியில் எடப்பாடியின் பிரம்மாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட உள்ளன.

இதேபோல மண்டபம் வளாகத்தில் அம்பத்தூர் சாலையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோரின் முழு உருவ 100 அடி கட்அவுட் வைக்கப்பட உள்ளன. இதேபோல பூந்தமல்லி நெடுஞ்சாலை அடையாளம்பட்டு சாலை சந்திப்பில் 100 அடியில் வண்ண வண்ண விளக்குகளால் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி படங்கள் உள்ள கட்அவுட் வைக்கப்பட உள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *