செய்திகள்

அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி தீவிரம்

Makkal Kural Official

சென்னை, அக்.25–

அடையாறு ஆற்றின் முக துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறையினரால் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

முகத்துவாரம் மண் படுகையினால் மூடப்படும் நிகழ்வானது கடல் அலைகளினால் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமானதால் முதலமைச்சர் நேற்று (24–ந் தேதி) அடையாறு முக துவாரத்திற்கு திடீராய்வு மேற்கொண்டு நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகதுவாரத்தை அகலப்படுத்தும் பணியினை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய ஆணையிட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கையினை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களையும் கொண்டு, போர்க்கால அடிப்படையில் நீர்வளத்துறையினரால் அடையாறு ஆற்றின் முக துவாரத்தின் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளின் முன்னேற்றத்தினை நீர்வளத்துறை அரசு செயலர் ஜெயகாந்தன், முதன்மை தலைமைப்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமைப்பொறியாளர் பொதுபணி திலகம், கண்காணிப்பு பொறியாளர் க.செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இப்பணிகளின் முன்னேற்றத்தினை தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு பொறியாளர் க.செல்வகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைத்து செயற்பொறியாளர் கோ.ரா.ராதாகிருஷ்ணா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார், மற்றும் உதவி பொறியாளர் ஆர்.சதீஷ்குமார் ஆகியோருடன் கிருஷ்ணா குடிநீர் சிறப்பு திட்ட கோட்டத்தில் இருந்து கூடுதலாக மூன்று களப்பொறியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க ஆவணம் செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *