செய்திகள்

அகில இந்திய புதுமை கண்டுபிடிப்புப் போட்டி-:

Makkal Kural Official

20 கல்லூரிகளின் 25 அணிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் பங்கேற்பு

தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் பீடு நடை

சென்னை, டிச. 11–

தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் ‘‘அகில இந்திய புதுமை கண்டுப்பிடிப்பு போட்டி -2025’’ கல்லூரி வளாகத்தில் துவங்கியது. கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார்.

பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், அகில இந்திய தொழில் நுட்ப கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் போட்டி, இந்தியாவின் அளவில் பல்வேறு மாநிலங்களில் 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தை சேர்ந்த 20 பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 25 அணிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

துவக்க நாள் விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உதவி இயக்குநர் கிரிஷ்குமார் பாசின், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையின் மூத்த வழிகாட்டி நற்குணம் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முன்னதாக அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தின் தலைவர் டி.ஜி. சீத்தாராம் காணொளி வாயிலாக மாணவர்களுடன் உரையாற்றினார்.

சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் என்ற இரு பிரிவுகளில் ஐந்து நாள் நடைபெறும் இப் போட்டியில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் புதிய கண்டுப்பிடிப்புகளை உருவாக்கி, தீர்க்க இயலாள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி காணொளி வாயிலாக மாணவர்களுடன் கலை கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரியும் தலைவருமான சாய்பிரகாஷ் லியோமுத்து பேசுகையில், ‘இப்போட்டி, ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் தொடர்ந்து நான்காவது முறையாக நடைபெறுகின்றது. இப்போட்டியில் உத்தரகாண்ட், ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஐந்து நாட்கள் கல்லூரி வளாகத்திலேயே தங்கி போட்டியில் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையா அனைத்து விதமான ஏற்பாடுகளையும் ஸ்ரீ சாய்ராம் கல்வி குழுமத்தின் சார்பில் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

மேலும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜெ. ராஜா, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே. பழனி குமார், இயக்குநர் டாக்டர் ஆர். பழனியாண்டி, முதன்மை தகவல் அதிகாரி கே. நரேஷ் ராஜ், முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ஆர். சதீஷ்குமார், கல்லூரியின் மேலாண்மை துறை தலைவர் முனைவர் க. மாறன், புலத் தலைவர் முனைவர் எல். அருணாச்சலம், முனைவர் சி.ஆர். ரெனி ராபின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *